இந்தப் பதிவில் வெப்சைட் வோஸ்டிங் மற்றும் டொமைன் பற்றி விரிவாக பார்க்கலாம்.
வெப்சைட் என்பது இணையத்தின் மூலம் உலகத்தில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதரும் தனது ஒவ்வொரு நாளிலும் ஏதாவது ஒரு வகையில் இணையத்துடன் தொடர்பில் இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் பணிகளை மேற்கொள்ளவும் நண்பர்களுடன் உரையாடவும் தொழில் சம்பந்தமான உரையாடல்களை மேற்கொள்ளவும், மேலும் பலவிதமான செயல்களுக்கு நமக்கு இணையம் தேவைப்படுகிறது. குறிப்பாக தொழில்முனைவோர் தொழிலில் ஈடுபடுவோர் தமது தொழிலை விரிவுபடுத்த மேம்படுத்த இணையம் அவசியமான ஒன்றாகிறது.
தன்னுடைய சொந்த காரியங்கள் சொந்த செயல்களுக்காக அல்லது தொழில் நிறுவனங்களுக்கு இணையதளத்தை உருவாக்குவது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. அப்படி இணையதளத்தை உருவாக்க முதலில் நமக்குத் தேவையன இரண்டு நிலைகள்:
1. ஹோஸ்டிங் (Hosting)
2. டொமைன் (Domain).
இந்த ஹோஸ்டிங் மற்றும் டொமைன் எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. ஹோஸ்டிங் என்பது நமது இணையதளத்தை இயக்குவதற்கான ஒரு இடம் என்று பொருள் கொள்ளலாம்.
2. டொமைன் என்பது நமது இடத்திற்கான பெயர் என்று எடுத்துக் கொள்வோம்.
சாதாரணமாக நாம் ஒரு தொழிலைத் துவங்க முதலில் இடம் வாங்குவோம் பிறகு அந்த இடத்தை நமது பெயரில் பதிவு செய்வோம்.
அதுபோலவே நமது இணைய தளத்தை இணையத்தில் வாங்குவதற்கு பெயர்தான் ஹோஸ்டிங்.
சரி நாம் இணையத்தில் நமக்கான இடத்தை வாங்கி விட்டோம் அது எதற்கான இடம் அதில் பிற மக்கள் வந்து எதை பார்க்க போகிறார்கள் எதற்காக அந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான விடை தான் டொமைன்.
இன்னும் தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும் என்றால் அமேசான் ஃப்ளிப்கார்ட் இது போன்ற இணைய சேவைகள் உள்ள நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம். இந்த நிறுவனங்களில் நாம் என்ன செய்கிறோம். நமது வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களில் இருந்து ஆடம்பரமான பொருட்கள் வரை வாங்குகிறோம்.
இந்த இணையதளத்திற்கு செல்ல நாம் என்ன செய்ய வேண்டும் ஒன்று இந்த இணையதளம் வெளியிட்டுள்ள மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் செல்லலாம் அல்லது இணையத்தில் இவர்களின் இணைய முகவரியில் சென்று இந்த இணைய தளத்தை அடையலாம்.
உதாரணமாக அமேசான் என்ற தளத்திற்கு செல்ல வேண்டுமென்றால்
www.amazon.in
என்ற முகவரிக்கு செல்வோம். இதுதான் டொமைன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த டொமைனை இடம்பெறுவதற்கான இணையத்தில் உள்ள இடம்தான் ஹோஸ்டிங்.
நன்றி...
எமது பார்வையில் இந்த பதிவை படித்தவர் அனைவரும் இணையத்தில் போஸ்டிங் மற்றும் டொமைன் என்றால் என்ன என்பதைப் பற்றி தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்.
நன்றி...
எப்படி ஒரு போஸ்டிங் மற்றும் டொமைன் வாங்குவது என்பதை பற்றிய விளக்கமான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோஸ்டிங் ( hosting) மற்றும் வாங்க டொமைன் (Domain) வாங்க இங்கே கிளிக் செய்யவும் 👇🏻👇🏻👇🏻
https://www.hostg.xyz/aff_c?offer_id=6&aff_id=55028
அடுத்தடுத்த பதிவில் இணையத்தை பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம்.
![Hosting and Domain என்றால் என்ன? எப்படி வாங்குவது?](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhivihxJnddwC6wXsnJUDMDTNP-lGty3CFCib_vcoQTdUjGC2JDej5D_HYCZnIOnHBDxqb2fsIZaPZbHqZYTMj5BoFwC5nbi1VcQVCQBWrXsdmcZiGnMx1wGxIonAJhV7Fd74KfU-TAuKk/s72-c/20201109_093721.jpg)