Friday, 31 July 2020

ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிமுறைகள்

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் ஆன்லைன் எனப்படும் இணைய வழி கல்வி, நிறுவனங்களின் வேலைகள் என பலவகைகளில் ஆன்லைன் எனப்படும் இணையம் மூலம் வர்த்தகம் வேலை கல்வி என பலதரப்பட்ட நிகழ்வுகள் நடந்த வண்ணம் தான் உள்ளன. இதுபோன்ற மேற்கத்திய கலாச்சாரம் இல்லை இல்லை இது தற்போது உலகம் முழுவதும் உள்ள சிறு-குறு கிராமங்களில்கூட பரவியுள்ளது.

Covid-19 எனப்படும் கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடக்கத்தில் உள்ளதால் தற்போது இந்த இணையவழி சேவையின் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். 

தற்போது தமிழக அரசும் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளதால் இந்தப்பதிவில் ஆசிரியர்கள் எப்படி இணையத்தின் மூலமாக கற்பிக்க முடியும் கற்பிக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ள போகிறோம்.

முதலில் இதற்கு தேவையான சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள்களைப் பற்றி பார்ப்போம்.